About Ayurvedic Tamil Medicine
ஆயுர்வேதம் – ஆயுர் என்றால் ஆயுட்காலம், வேதம் என்றால் நூல்கள் – ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நூல்கள் எனலாம். ஆயுர்வேதம் என்பது வாழ்க்கையின் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்திலிருந்து வந்ததாகும். அது மட்டுமல்ல, ஆயுர்வேதம் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக புரிந்துக் கொள்வதுமாகும். ஆயுர்வேதக் கட்டமைப்பின்படி, இந்த உடலானது இன்றைய காலக்கட்டத்தில், நாம் இந்த பூமியிலிருந்து சேகரித்த ஒரு குவியல். இந்த பூமியின் தன்மை எதுவாகயிருந்தாலும், இந்த பூமியை உருவாக்கிய பஞ்சபூதங்களின் தன்மை எதுவாகயிருந்தாலும், அவை இந்த பருப்பொருள் உடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படையில், இந்த உடலானது, பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டுதான். நமது தனிப்பட்ட உடலானாலும், அல்லது இந்த மிகப் பெரிய பிரபஞ்ச உடலானாலும், எல்லாமே இந்த பஞ்சபூதங்களால், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தால் ஆனதுதான். ‘நான்’ என்று நீங்கள் நினைப்பதுகூட, இந்த பஞ்சபூதங்களின் குறும்புத்தனம் தான். காலத்தையும் சக்தியையும் உபயோகப்படுத்தி, உச்சக்கட்ட பலன் தரும் வகையில் நீங்கள் உங்கள் பருப்பொருள் உடலைக் கையாள வேண்டும். நீங்கள், உங்கள் உடலை உபயோகப்படுத்தி என்ன செய்தாலும், அது இந்த பூமியுடன் ஒரு தொடர்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது.
by B####:
Love it