THAAIMAN MEDIA

THAAIMAN MEDIA Free App

Rated 4.75/5 (12) —  Free Android application by APPS ADS

Advertisements

About THAAIMAN MEDIA

வணக்கம் அன்புத் தமிழர்களே

ஊடகமானது மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை மேம்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் பாதுகாக்கும் பொருட்டும், அனைத்து சமூகங்களினதும் கௌரவம், நீதி மற்றும் வாழ்வு ஆகியவற்றை பாதிக்கின்ற சகல வகையான மனித உரிமை மீறல்கள்பற்றிய தகவல்களை அறிக்கையிடும் வல்லமையை கொண்டிருப்பது மாத்திரமன்றி, விடயங்கள், நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி புரிதலையும், பொதுமக்கள் மத்தியில் அறிவூட்டலையும் ஏற்படுத்துவதுடன் உலகின் சகல பாகங்களிலும் உள்ள மக்களையும் இணைக்கின்றது.

அதுமாத்திரமன்றி, பொதுமக்கள் மத்தியில் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அறிவூட்டலை மேற்கொள்வதற்கும், அத்துடன் சகல மனித உரிமை மீறல்களையும் அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்குமான தார்மீக கடமையினையும் கொண்டிருக்கிறது.

இந்த அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்களினது போராட்டம் மற்றும் அவர்களதுபிரச்சினைகள், அச்ச உணர்வுகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் நம்பகத்தன்மையானதும் சரியானதும் பகுத்தாய்வுக்குட்பட்டதுமான முறையில் தகவல் வழங்குவதற்கும் கருத்துருவாக்குவதற்குமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்வது மாத்திரமன்றி அரசியல் பங்குபற்றல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றம் ஆகிய நிகழ்முறைகளின் போது தொடர்ச்சியாக பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை ஒரு தொடர்பாடல் மூலமான சமூக செயற்பாட்டினூடாக வலுவூட்டும் பொருட்டு அறிவுப் பரிமாற்ற சேவையினை மேற்கொள்வதுமே யாழ்.பாரிஸ் மற்றும் தாய்மண் இணையத்தளங்களின் குறிக்கோளாகும்.

யாழ்.பாரிஸ் மற்றும் தாய்மண் இணையத்தளங்களானது , தனது செய்தி தயாரிப்பு மற்றும் செய்தி ஆய்வு ஆகிய செயன்முறைகளின் போது, சமாதனம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய கோட்பாடுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் இவ்விரு கோட்பாடுகள் மற்றும் தொடர்பாடல் உரிமைகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு ஆகியவற்றின் பின்னணியில் நேர்மை, துல்லியம் மற்றும் சமநிலை ஆகிய ஊடகவியல் நெறிமுறைகளின் பால் வலுவான பற்றுதியினை கொண்டிருக்கிறது.

கடந்த 2014 .02.16 ஆரம்பிக்கப்பட்டயாழ்.பாரிஸ் இணையத்தளமும் 2015.04.13 ஆரம்பிக்கப்பட்ட தாய்மண் இணையத்தளமானது பிரான்ஸை தளமாகக்கொண்டு அனுபவமும், ஆற்றலும் தகைமையும் மிக்க ஒரு உலகளாவிய ஊடகவியலாளர்கள் வலையமைப்புடன் இயங்கி வரும் ஒரு சுயாதீன செய்திச் சேவையாகும்.

உலகம் பூராகவும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட அமைப்புக்களுக்கு தனது சேவையை யாழ்.பாரிஸ் மற்றும் தாய்மண் இணையம் வழங்கவிருக்கிறது.

எமது நோக்கம்: இலங்கைத் தீவு மற்றும் இதர இடங்களில் வாழுகின்ற தமிழ் மக்களை அடக்குமுறை, ஆதிக்கம், அநீதி மற்றும் சமூக கேடுகளில் இருந்து விடுவிக்கும் பொருட்டு அவர்களை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அறிவூட்டப்பட்ட விழிப்புணர்வுநிலைமிக்க ஒரு சமூகமாக ஆக்குவதற்கான குரலாக இருத்தல்.

எமது பணித்திட்டம்: நிகழ்வுகள், சம்பவங்கள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரவிடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் தொடர்பாடல் மற்றும் கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்வதன் மூலம் மிகவும் வினைத்திறன் மிக்கதொரு தகவல் மற்றும் அறிவுப் பரிமாற்ற தளமாக இருத்தல்.

எமது ஆசிரியர் பீட கொள்கை

எமது ஆசிரியர் பீட கொள்கையானது மேலே விபரிக்கப்பட்ட நோக்கம் மற்றும் பணித்திட்டம் ஆகியவற்றினால் தீர்மானிக்கப்படுவதுடன் தொழில்சார் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ( Society of Professional Journalists) உருவாக்கப்பட்ட ஒழுக்கவியல் கோவையினால் வழிநடத்தப்படுகிறது. தொழில்சார் ஊடகவியலாளர்கள் அமைப்பானது பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊடகவியலாளர்கள் குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுடன் ஒழுக்கநெறி சார் ஊடகவியலாளர்கள் கீழ்வரும் நான்கு நெறிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது:

உண்மையை கண்டறிந்து அதனை அறிக்கையிடு.
தீங்கு ஏற்படுவதை கூடியவரை குறை
சுயாதீனமாக செயற்படு
பொறுப்புகூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படு.
பணம் கொடுத்து செய்யப்படும் எந்த விளம்பரங்களும் யாழ்.பாரிஸ் மற்றும் தாய்மண் இணையத்தளங்களின் செய்திகளின் தரம், சரிநிலை அல்லது அதன் எந்தவொரு ஊடக சேவையினையும் கட்டுப்படுத்தவோ அன்றி ஆதிக்கம்செய்யவோ இடமளிக்கப்படமாட்டாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்த விரும்புகின்றேன்

சுயாதீன ஊடகவியலாளன்

How to Download / Install

Download and install THAAIMAN MEDIA version 1.0 on your Android device!
Downloaded 100+ times, content rating: Everyone
Android package: com.wTHAAIMAN_6119695, download THAAIMAN MEDIA.apk

All Application Badges

Free
downl.
Android
4.0+
For everyone
Android app

What are users saying about THAAIMAN MEDIA

D70%
by D####:

தமிழுக்கும் தமிழனுக்கானா ஒரு அப்பிளிக்கேஷன் நல்லது. நன்றி

W70%
by W####:

i like u..i joined

Y70%
by Y####:

Important for real tamils

X70%
by X####:

Spr

Y70%
by Y####:

சுப்பர்

Y70%
by Y####:

Great


Share The Word!


Rating Distribution

RATING
4.85
12 users

5

4

3

2

1